இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Sept 2025 11:31 AM IST
இந்த ஆட்டத்தில் யுஏஇ பேட்டிங் செய்தபோது 13-வது ஓவரை இந்திய ஆல் ரவுண்டர் ஷிவம் துபே வீசினார். அந்த ஓவரில் துபே வீசிய 3-வது பந்தை எதிர்கொண்ட ஜூனைத் சித்திக் அடிக்க முயற்சித்த போது. அது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கைக்கு சென்றது. பந்தை தவற விட்ட சித்திக், துபேவின் இடுப்பில் இருந்த டவல் கீழே விழுந்ததை சுட்டிக்காட்டினார்.
- 11 Sept 2025 11:15 AM IST
ஆல் டைம் சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோகித் இடம்பெற மாட்டார்... ஏனெனில்.. - மஞ்ச்ரேக்கர்
இந்திய அணியின் ஆல் டைம் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோகித் சர்மா இடம்பெற மாட்டார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய ஆட்டத்தை வைத்தே பேட்ஸ்மேன்களின் தரம் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் ரோகித் ஆல் டைம் பட்டியலில் இடம் பிடிக்க மாட்டார் என்று மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
- 11 Sept 2025 11:02 AM IST
எல்லோரை போலவும், நானும் அந்த விஷயத்தை அதிகம் செய்கிறேன்- சுருதிஹாசன்
சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் சுருதிஹாசன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "எல்லோர் போலவும், நானும் செல்போனை ரொம்ப ரொம்ப அதிகமாகவே பயன்படுத்துகிறேன். நிறைய வேலைகளுடன் செல்போன் தொடர்பில் இருப்பதால், ஒன்றும் செய்ய முடியவில்லை. சில நேரம் செல்போன்களில் சிக்னல் இல்லாமல் போகும்போது வெறுப்பாக இருக்கிறது. சில வேளைகளில் அதுவே மகிழ்ச்சியாகவும் இருக்கிறது" என்றார்.
- 11 Sept 2025 11:00 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
ஆசிய கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் விலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான டிக்கெட்டுகள் 'பிளாட்டினம்லிஸ்ட்.நெட்' (platinumlist.net) என்ற இணையதளம் மூலம் விற்கப்படுகிறது. லீக் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் ரூ.1,200 முதல் 3,600 வரையிலும், சூப்பர்4 சுற்றுக்கான டிக்கெட்டுகள் ரூ.2,400 முதல் ரூ.6,000 வரையிலும் விற்பனையாகிறது.
- 11 Sept 2025 10:59 AM IST
பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்த 'லோகா' படம்
லோகா படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது, இப்படம் உலகளவில் ரூ. 202 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. உலகளவில் ரூ.200 கோடி மைல்கல்லை எட்டிய 4-வது மலையாளப் படம் என்ற பெயரையும் இப்படம் பெற்றிருக்கிறது.
- 11 Sept 2025 10:57 AM IST
ஆசிய கோப்பை: குல்தீப் யாதவ் மாபெரும் சாதனை
ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார். இந்த பட்டியலில் புவனேஸ்வர் குமார் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.
- 11 Sept 2025 10:56 AM IST
அதர்வாவுக்கு எப்போது திருமணம்.. விஷால் பெயரை குறிப்பிட்டு சொன்ன பதில்
'முரட்டுக்காளையாக சுற்றிய விஷாலுக்கு திருமணமாக போகிறது. உங்களுக்கு எப்போது திருமணம்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா, "விஷால் எப்போது திருமணம் செய்துகொள்கிறாரோ, அதன்பிறகு தான் நான் திருமணம் செய்துகொள்வேன்" என்று சிரித்தபடி பதில் அளித்தார்.
- 11 Sept 2025 10:53 AM IST
அரசு ஊழியர்களை தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தினால் நடவடிக்கை.. தலைமைச்செயலாளர் எச்சரிக்கை
தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி சில அரசு ஊழியர் சங்கங்களின் உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக 11-ந் தேதி (இன்று) ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கப்போவதாக தீர்மானித்துள்ளது தெரிகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விதிப்படி, எந்தவொரு சங்கமும் தங்களது உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தக்கூடாது.
இதனை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் வருகையை உறுதி செய்யும் வகையில் அவர்களது வருகையை பதிவு செய்து அதுதொடர்பான பதிவேட்டை காலை 10.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு துறைகளின் பிரிவு அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 11 Sept 2025 10:30 AM IST
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவு
படுகொலை செய்யப்பட்ட சார்லி கிர்க்கிற்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சார்லி கிர்க்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், அவரது படுகொலை சம்பவம் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- 11 Sept 2025 10:29 AM IST
ஏமன் நாட்டில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் - 35 பேர் உயிரிழப்பு
ஏமன் நாட்டின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏமன் நாட்டில் உள்ள ராணுவ தலைமையக கட்டிடம் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
















