இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Sept 2025 2:33 PM IST
''அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்'' - நடிகை ரித்திகா நாயக்
சமீபத்திய ஒரு நேர்காணலில், நடிகை ரித்திகா தனக்கு பிடித்த ஹீரோயின் குறித்து பகிர்ந்தார்.
- 12 Sept 2025 2:28 PM IST
2026 தேர்தல் பாஜகவின் இலக்கு அல்ல - குருமூர்த்தி
(2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பாரதிய ஜனதாவின் இலக்கு அல்ல. அண்ணாமலையின் வேகமான செயல்பாடுகளே மாநிலத் தலைமை மாற்றத்திற்கு காரணம். தமிழகத்தில் பாஜக படிப்படியாக வளரும் திட்டத்தை கொண்டுள்ளது என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
- 12 Sept 2025 2:27 PM IST
ஆட்சியில் பங்கு தந்தால் கூட்டணி - கிருஷ்ணசாமி
எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறதோ அந்த கட்சியோடு கூட்டணி வைப்போம். ஆட்சி அதிகாரத்தில் விஜய் பங்கு தந்தால், அவருடன் கூட்டணி சேர்வது பற்றி பரிசீலிப்போம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
- 12 Sept 2025 2:25 PM IST
ராமதாஸ்-அன்புமணி அணியினர் இடையே மோதல்
திண்டிவனம்: வன்னியர் சங்க அலுவலகத்தை பயன்படுத்துவது தொடர்பாக ராமதாஸ்-அன்புமணி அணியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வன்னியர் சங்க அலுவலகத்துக்கு ராமதாஸ் அணியினர் பூட்டு போட்டனர்; மோதலால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- 12 Sept 2025 2:25 PM IST
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் வழக்குகள் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
- 12 Sept 2025 2:25 PM IST
நடிகை பாலியல் புகார் - சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்
நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய கோரிய சீமானின் வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதி அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டு சீமானின் மேல்முறையீட்டு மனு செப். 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- 12 Sept 2025 2:24 PM IST
சென்னையில் தரையிறங்கிய இந்தோனேசிய ராணுவ விமானம்
சென்னை விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கியது இந்தோனேசிய ராணுவ விமானம். விசாரணையில் விமானிகளின் ஓய்வுக்காக சென்னையில் தரையிறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானிகள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டது. இந்தோனேசிய ராணுவ விமானம் திடீரென தரையிறங்கியதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- 12 Sept 2025 2:24 PM IST
நிலம் வாங்கியது உண்மைதான் - அண்ணாமலை விளக்கம்
"நான் விவசாய நிலம் வாங்கியது உண்மைதான், என் மனைவியின் சேமிப்பு மற்றும் கடன் மூலம் நிலம் வாங்கியுள்ளேன், நிலம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தி வருகிறேன். வாங்கிய நிலத்தில் பால் பண்ணை அமைக்க விண்ணப்பித்துள்ளேன்.
நிலம் வாங்கியது குறித்து சிலர் வதந்தி பரப்புகின்றனர். நானும் எனது மனைவியும் வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளோம். விரைவில் முதலீட்டு நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இது எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஒரு வணிக முன்னெடுப்பு என்று கோவையில் நிலம் வாங்கிய விவகாரம் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
- 12 Sept 2025 1:13 PM IST
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (செப்.12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 12 Sept 2025 12:49 PM IST
ஆசிய கோப்பை: சாம்சனுக்கு அங்கே பேட்டிங் செய்யும் வாய்ப்பை கொடுங்கள் - அஸ்வின் கோரிக்கை
ஆசிய கோப்பையில் சாம்சனிடம் கொடுத்த 22 டக் அவுட் வாக்குறுதியை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் காப்பாற்றியுள்ளதாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார். ஆனால் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் அதிகம் அசத்துகிறார் என்பதால் அவருக்கு அங்கே விளையாடும் வாய்ப்பைக் கொடுங்கள் என்றும் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார்.
















