இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Sept 2025 12:47 PM IST
நடிகை ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை ஐகோர்ட்
வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்து, ஹன்சிகாவுக்கு எதிரான விசாரணை தொடர மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஹன்சிகா மீது விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி கிடைத்து இருக்கிறது. விரைவில் ஹன்சிகா விசாரணைக்கு அழைக்கப்பட்டு, தேவைப்பட்டால் கைதும் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
- 12 Sept 2025 12:45 PM IST
‘உங்க விஜய் நா வரேன்’ - த.வெ.க.வின் பிரசார லோகோ வெளியீடு
திருச்சியில் நாளை தொடங்க உள்ள விஜய் பரப்புரைக்கான இலச்சினையை த.வெ.க. வெளியிட்டுள்ளது.
அதில் "உங்க விஜய் நா வரேன்" என்ற வாசகம் பிரதானமாக உள்ளது. மாநாட்டில் இடம்பெற்ற "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
- 12 Sept 2025 12:36 PM IST
மனைவி, கள்ளக்காதலனை தலை துண்டித்து கொன்றது ஏன்..? - கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனின் தலையை துண்டாக்கி சாக்குப் பையில் அவர் எடுத்து சென்றார். இதுகுறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
- 12 Sept 2025 12:06 PM IST
சென்னையில் கடத்தப்பட்ட அரசு பஸ் ஆந்திராவில் மீட்பு
சென்னை கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றார். கடத்தப்பட்ட பஸ் ஆந்திராவின் நெல்லூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
பஸ்நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்துவந்தநிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த பஸ்சை பிடித்து வைத்துள்ளதாக ஆந்திர போலீசார் கொடுத்த தகவலின் பேரில், நெல்லூர் சென்று பஸ்சை மீட்டதுடன், பஸ்சை ஓட்டி சென்ற ஒடிசாவை சேர்ந்த நபரையும் கைது செய்தனர்.
- 12 Sept 2025 11:54 AM IST
கொழுப்பைக் குறைத்தால் கோடீஸ்வரர் ஆகலாம்: ஊழியர்களுக்கு சீன நிறுவனம் சலுகை
கொழுப்பை குறைக்கும் அதாவது. உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் போனஸ் அளிக்கப்படும் என்று சீன நிறுவனம் அறிவித்துள்ளது. குறைக்கும் ஒவ்வொரு அரை கிலோவிற்கும் சுமார் ரூ.6 ஆயிரம் சன்மானம் அறிவித்துள்ளது.
சவாலில் வென்ற பிறகு, மீண்டும் எடை கூடினால் ஒவ்வொரு அரை கிலோ எடைக்கும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுமாம். ஊழியர்கள் மத்தியில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இன்ஸ்டா 360 என்ற நிறுவனம் இந்த சவாலை தொடங்கியுள்ளது. சீன நிறுவனம் அறிவித்துள்ள இந்த சவால் குறித்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
- 12 Sept 2025 11:53 AM IST
சில இந்திய வீரர்கள் இன்னும் அவர்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க போராடுகிறார்கள் - அப்ரிடி சாடல்
இந்திய கிரிக்கெட் அணியில் சில வீரர்கள் தாங்கள் இந்தியர்கள் என நிரூபிக்க போராடுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி சாடியுள்ளார்.
- 12 Sept 2025 11:49 AM IST
திருப்பூர், பல்லடத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். தொடர்ந்து நேற்று மடத்துக்குளத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு, தாராபுரம் வந்தார். அங்கு மக்கள் மத்தியில் பேசினார். பின்னர் இரவு 9.30 மணி அளவில் காங்கயம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்தார். இதையடுத்து பிரசாரத்தை முடித்துவிட்டு திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் தொழில்துறையினரை சந்தித்து குறைகளை கேட்கிறார். தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார். பின்னர் மாலை 4.30 மணிக்கு திருப்பூர் பி.என். ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். 6 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் பல்லடம் மார்க்கெட் அருகே பேசுகிறார்.
- 12 Sept 2025 11:35 AM IST
நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை; கனடாவில் இந்திய வம்சாவளி பெண் டாக்டரின் லைசென்ஸ் பறிப்பு
கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சுமன் குல்பே. இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த விசாரணையின்போது நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததை சுமன் குல்பே ஒப்புக்கொண்டார். அதே சமயம், தன் மீதான குற்றச்சாட்டுகளில் பல்வேறு தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக சுமன் குல்பே கூறியுள்ளார். மேலும், அவரது பயிற்சியாளர் ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், அந்த சமயத்தில் இருவரும் காதலித்து வந்ததாகவும் சுமன் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
- 12 Sept 2025 11:30 AM IST
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் தேவராஜ் (வயது 65) என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மதியம் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், நகை வாங்குவதுபோல போக்குகாட்டி 3 பவுன் சங்கிலி, ஒரு பவுன் வளையல், ஒரு பவுன் கம்மல் என 5 பவுன் நகைகளை வாங்குவது போல் பார்த்து உள்ளார்.
- 12 Sept 2025 11:29 AM IST
கார் ஏற்றி முதியவரை கொன்ற பேரூராட்சி தலைவர்.. விபத்து நாடகமாடியது அம்பலம்
திருப்பூர் அருகே, தார்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த முதியவர் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
















