இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 Aug 2025 9:37 AM IST
வாக்குத்திருட்டு புகார் விவகாரம்: இன்று விளக்கம் அளிக்கிறது தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்துவதாக அறிவித்து உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இது நடக்கிறது. சந்திப்பு எதற்கானது? என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் அது, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 17 Aug 2025 9:35 AM IST
வாக்கு திருட்டுக்கு எதிரான ராகுல் காந்தியின் யாத்திரை - பீகாரில் இன்று தொடக்கம்
பா.ஜனதாவுடன் சேர்ந்து தேர்தல் கமிஷன் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் முறைகேடு நடந்ததாக கூறிய அவர், பெங்களூரு மத்திய தொகுதியில் நடந்த முறைகேடு குறித்த தரவுகளையும் வெளியிட்டு இருந்தார்.
இதற்கு எதிராக ராகுல் காந்தி தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பீகாரில் யாத்திரை செல்ல திட்டமிட்டு இருந்தார். 'வாக்காளர் உரிமை யாத்திரை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை பீகாரின் சசாரம் என்ற இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
- 17 Aug 2025 9:33 AM IST
தாம்பரம் சானிடோரியம் ரெயில் நிலையத்தில் 3 வயது குழந்தையை தவிக்கவிட்ட கொடூரன்
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரெயில் பெட்டியில் இருந்த ஒரு கொடூரன், ரெயில் புறப்பட இருந்த நேரத்தில் சுமார் 3 வயது ஆண் குழந்தையை ரெயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டு சென்றுள்ளான்.
- 17 Aug 2025 9:31 AM IST
நாகர்கோவில், திருச்சி விரைவு ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்
கோவையில் இருந்து தினமும் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றுக்கு முன்பு வரை திருச்சி-பாலக்காடு, கோவை-நாகர்கோவில் பகல் நேர ரெயில்கள் மற்றும் கோவை-சேலம் மெமு ரெயில் ஆகிய ரெயில்கள் இருகூர் நிலையத்தில் நின்று சென்றன. இதனால் இருகூர் மற்றும் இருகூரை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பணி நிமித்தமாக வெளியூர் செல்வோர் மிகவும் பயனடைந்து வந்தனர்.
- 17 Aug 2025 9:30 AM IST
திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆழ்ந்த அறிவும் தெளிவான சிந்தனையும் உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! லட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- 17 Aug 2025 9:28 AM IST
12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17 Aug 2025 9:27 AM IST
22-ந்தேதி நடைபெறும் பா.ஜ.க. மாநாட்டில் கலந்துகொள்ளும் அமித்ஷா, தேசிய தலைவர்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்
சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது. இரு கட்சிகளும் இணைந்து தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டு உள்ளன. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் கட்சியை பலப்படுத்தும் பணியில் பா.ஜனதா தீவிரமாக இறங்கி உள்ளது.
- 17 Aug 2025 9:25 AM IST
மேஷம்
கலைஞர்களுக்கு வர வேண்டிய பாக்கி தொகை கைக்கு வந்து வரும். தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். திருமணமானபின் சில கடமைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர்ஊதா














