இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Jan 2026 10:36 AM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை: இன்று கடைசிநாள்
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று கடைசி நாளாகும்.
- 18 Jan 2026 10:35 AM IST
சந்திரகாச்சி - தாம்பரம் இடையே இன்று அம்ரித் பாரத் ரெயில் சேவை தொடக்கம்
இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான அம்ரித் பாரத் ரெயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது. இவை ஏ.சி. இல்லாத ரெயில் பெட்டிகளை கொண்டது. தமிழகத்தில் முதல் அம்ரித் பாரத் ரெயிலானது ஈரோடு - பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்படுகிறது. அம்ரித் பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம்.
- 18 Jan 2026 10:33 AM IST
2026 தேர்வு அட்டவணையை தேர்வு வாரியம் உடனே வெளியிட வேண்டும் - அன்புமணி
4 லட்சம் ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டு விடக்கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 18 Jan 2026 10:32 AM IST
கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: ஐரோப்பிய ஆணைய தலைவர் பேச்சு
பிராந்திய ஒற்றுமை மற்றும் டென்மார்க் இறையாண்மையை உறுதி செய்வோம் என ஊர்சுலா கூறியுள்ளார்.
- 18 Jan 2026 10:31 AM IST
இலங்கையில் 3-வது பெய்லி பாலம் கட்டுமான பணியை நிறைவு செய்த இந்திய ராணுவம்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அது மீட்டெடுக்கப்பட்டு உள்ளது.
- 18 Jan 2026 10:29 AM IST
கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18 Jan 2026 10:00 AM IST
பாகிஸ்தான்: வணிக வளாகத்தில் தீ விபத்து 3 பேர் பலி; பலர் காயம்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென இதில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்தனர்.
- 18 Jan 2026 9:59 AM IST
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க முன்னதாகவே விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- 18 Jan 2026 9:58 AM IST
கர்நாடகாவில் சோகம்; ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் விபத்தில் பலி
ஒருவர் சிக்கஜாலா பகுதியை சேர்ந்தவர். மற்ற 2 நண்பர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
- 18 Jan 2026 9:56 AM IST
இன்றுடன் நிறைவுபெறுகிறது சென்னை சங்கமம் கலை திருவிழா
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அன்று (14/01/2026) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பறை இசைத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கலைவிழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஒருங்கிணைத்து வருகிறார்.



















