இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Oct 2025 9:47 AM IST
தொடர் கனமழை: ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ரத்து
ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு மண் சரிந்து காணப்பட்டது.
- 19 Oct 2025 9:45 AM IST
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் டிசம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்
தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 19 Oct 2025 9:44 AM IST
குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
- 19 Oct 2025 9:43 AM IST
விஜய் மீது தவறு இல்லை; கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினர் பேட்டி
என்ன உதவி வேண்டுமானாலும் செய்வேன் என்று விஜய் உறுதி அளித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
- 19 Oct 2025 9:39 AM IST
கன்னி
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. சம்பள பாக்கி கைக்கு வரும். ஆரோக்கியம் பளிச்சிடும். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்














