இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025


இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
x
தினத்தந்தி 21 Sept 2025 9:10 AM IST (Updated: 21 Sept 2025 7:56 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 21 Sept 2025 4:06 PM IST

    இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

    சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 21 Sept 2025 3:56 PM IST

    விஜய்க்கு கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது - கமல்ஹாசன்

    ம.நீ.ம. தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது;

    “நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மட்டும் விமர்சனங்கள் எழுவதில்லை. நடிக்க வந்தாலும் விமர்சனங்கள் எழும். கூடுகிற கூட்டம் அனைத்தும் ஓட்டாக மாறாது. அது அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். இது விஜய்க்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும். நல்ல பாதையில் செல்லுங்கள், தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்காக செய்யுங்கள் என்பதுதான் நான் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வைக்கும் வேண்டுகோள். நான் குடிமகனாக இருந்தாலும் இதே வேண்டுகோளைதான் முன்வைத்திருப்பேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

  • 21 Sept 2025 1:49 PM IST

    யூடியூபர்கள் மீது நடிகர் வடிவேலு புகார்

    "சினிமா நடிகர்கள் குறித்து அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் வடிவேலு புகார்

    "அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ் எச்சரிக்கை

  • 21 Sept 2025 1:44 PM IST

    தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தராதது ஏன்? - தர்மேந்தர பிரதான் விளக்கம்

    சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-

    கல்வி நிதி பெறும் விவகாரத்தில் அரசியல் வேண்டாம். மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியை தர முடியும். மாணவர்களுடைய நலனை விட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் தராதீர்கள். நான் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

  • 21 Sept 2025 1:33 PM IST

    ''என் கனவு நனவானது''...நடிகை லட்சுமி மஞ்சுவின் உணர்ச்சிபூர்வ பதிவு

    மோகன் பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு சமீபத்தில் ''தக்சா'' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை வம்சி கிருஷ்ண மல்லா இயக்கியுள்ளார். ஸ்ரீ லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் மற்றும் மஞ்சு என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த படம் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

  • 21 Sept 2025 1:32 PM IST

    நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

    69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

  • 21 Sept 2025 1:20 PM IST

    கள்ளக்காதல், கணவர், குழந்தைகள் கொலை... தசராவில் 11 தலையுடனான சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிக்க திட்டம்


    தசரா திருவிழாவின்போது. சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிப்பது என அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.


  • 21 Sept 2025 1:18 PM IST

    இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸி. 225 ரன்கள் சேர்ப்பு


    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் அடித்துள்ளது. அபாரமாக பந்துவீசிய இந்தியா தரப்பில் ஹெனில் படேல் 3 விக்கெட்டுகளும், கிஷன் குமார் மற்றும் கனிஷ்க் சவுகான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


  • 21 Sept 2025 1:16 PM IST

    சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் வரலாறு - மு.க.ஸ்டாலின்


    தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story