இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Jan 2026 11:40 AM IST
முள்ளக்காடு கிராமத்தில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- 22 Jan 2026 11:38 AM IST
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான முக்கிய தகவல்
தே.ஜ. கூட்டணியில் பா.ம.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
- 22 Jan 2026 11:06 AM IST
"அரசியலில் இருந்தே விலகுகிறேன்.." - குன்னம் ராமச்சந்திரன் திடீர் முடிவு.!
திமுகவில் இணையும் முடிவை கைவிடுவதாக குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
- 22 Jan 2026 11:05 AM IST
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்: பியூஸ் கோயல்
தமிழக நலனுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.
- 22 Jan 2026 11:04 AM IST
தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிக்கு அடிக்கல்
தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
- 22 Jan 2026 11:03 AM IST
கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் மூலம் மீஞ்சூர் பகுதியில் விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கே.என். நேரு கூறினார்.
- 22 Jan 2026 11:02 AM IST
நாளைய பொதுக்கூட்டம், தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று விருந்தளித்தார். பியூஸ் கோயல், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
- 22 Jan 2026 11:01 AM IST
தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை - சீமான்
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதை விற்பனையின் உச்சத்தை எட்டியுள்ளது என்று சீமான் கூறியுள்ளார்.
- 22 Jan 2026 10:22 AM IST
பாகிஸ்தான்: வணிக வளாக தீ விபத்தில் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு
துபாய் கிராக்கரி என்ற பெயரிடப்பட்ட ஒரு கடையில் இருந்து மட்டுமே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 22 Jan 2026 10:21 AM IST
ஸ்பெயினில் மற்றொரு ரெயில் தடம் புரண்டு விபத்து: டிரைவர் பலி; 37 பேர் காயம்
ஸ்பெயின் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதிவிரைவு ரெயில் தடம் புரண்டு, அதன் மீது, அரசால் நடத்தப்படும் ரெயில் மோதியதில் 41 பேர் பலியானார்கள்.
















