இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025
x
தினத்தந்தி 30 Jun 2025 9:15 AM IST (Updated: 1 July 2025 9:28 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 30 Jun 2025 2:49 PM IST

    வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளிடையே நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும் நீர்ச்சத்துக் குறைபாடால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படாமல் தடுக்கவும் வாட்டர் பெல் திட்டம் கொண்டுவரப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இந்த நிலையில், இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    இதன்படி, காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என பள்ளிகளில் மணி ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாது தண்ணீர் அருந்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில், பள்ளிகளில் 2 - 3 முறை வாட்டர் பெல் அடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இந்த புதிய நடைமுறை பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

  • 30 Jun 2025 1:02 PM IST

    பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் நிலையில்3 கோடி வாக்காளர்களுக்கு நெருக்கடி

    புதுடெல்லி,

    பீகார் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. எனவே, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை தேர்தல் கமிஷன் தொடங்குகிறது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், இறந்தவர்கள் ஆகியோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, பிழையற்ற வாக்காளர் பட்டியலை தயாரிக்க உறுதி பூண்டுள்ளது. இதற்காக வாக்காளர் பதிவு அதிகாரிகள், வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்ப்பார்கள்.

    பீகார் மாநிலத்தில் மொத்தம் 7 கோடியே 89 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2003-ம் ஆண்டு நடந்த சிறப்பு திருத்தத்துக்கு பிறகு 4 கோடியே 96 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே இருந்தனர்.

    எனவே, தேர்தல் கமிஷன் விரைவில் 2003-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறது. அதில் இடம்பெற்றுள்ள 4 கோடியே 96 லட்சம் வாக்காளர்களும் எந்த ஆவணத்தையும் அளிக்க வேண்டியது இல்லை. ஆனால், மீதி சுமார் 3 கோடி வாக்காளர்கள் தங்களது பிறந்த இடம் அல்லது தேதியை நிரூபிக்க தேவையான 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

  • 30 Jun 2025 11:53 AM IST

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 10 பேர் தீக்கிரையாகினர். 20 பேர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் தீயணைக்கும் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • 30 Jun 2025 11:11 AM IST

    • "அமித்ஷா மட்டும் தான் கூட்டணி ஆட்சி என்கிறார்"
    • "அமித்ஷா மட்டும் தான் கூட்டணி ஆட்சி என பேசி வருகிறார், கூட்டணி ஆட்சி குறித்து ஈபிஎஸ் கூறியுள்ள கருத்து பாஜகவுக்கானது
    • பாஜக - அதிமுக கூட்டணியில் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை" - திருமாவளவன்

  • 30 Jun 2025 10:55 AM IST

    • கழிவுநீர் குழாய் உடைப்பு- மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
    • திருமங்கலம் பகுதியில் கழிவு நீர் குழாய் உடைந்து 100 அடி சாலையில் கழிவு நீர் தேங்கிய விவகாரம் - மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
    • மெட்ரோ பணிகளால் கழிவு நீர் குழாய் உடைந்ததாக பரவிய தகவல்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு
    • திருமங்கலத்தில் மெட்ரோ பணிகள் எதுவும் நடைபெறவில்லை, கழிவுநீர் குழாய் உடைப்புக்கும் மெட்ரோ பணிகளுக்கும் சம்மந்தமில்லை

  • 30 Jun 2025 10:35 AM IST

    • எண்ணெய் கப்பலில் தீ - மீட்பு பணியில் கடற்படை
    • குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து
    • இந்திய கடற்படை வீர‌ர்கள் தீயை கட்டுப்படுத்தினர், 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் மீட்பு

  • 30 Jun 2025 10:33 AM IST

    சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திமுக எம்.பி ஆராசாவை கண்டித்து பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் பேசியதால், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • 30 Jun 2025 9:18 AM IST

    காசாவில் போர் நிறுத்தம் - டிரம்ப் அழைப்பு

    காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு

    ஈரான் உடனான போர் நிறுத்த‌த்தை தொடர்ந்து, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் டிரம்ப் அழைப்பு

1 More update

Next Story