இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025
x
தினத்தந்தி 30 Jun 2025 9:15 AM IST (Updated: 1 July 2025 9:28 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 30 Jun 2025 7:56 PM IST

    புதுச்சேரியில் இருந்து இன்று மாலை பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் மாலை 5.15 மணியளவில் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு, சேவை ரத்து செய்யப்பட்டது.

    ரத்து செய்யப்பட்ட விமானத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலர் தருண் சுக், நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் உள்பட 70 பேர் இருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

  • 30 Jun 2025 7:53 PM IST

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 30 Jun 2025 6:59 PM IST

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நிலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விருதுநகர் மற்றும், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 30 Jun 2025 5:51 PM IST

    சென்னையில் 01.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    தாம்பரம்: செம்பாக்கம் நூத்தஞ்சேரி மெயின் ரோடு, மாமூர்த்தி அம்மன் கோயில் தெரு, ஜோதி நகர், மாணிக்கம் நகர், பாலா கார்டன், ஜாய் நகர், ராஜ்பாரீஸ் ஆதித்யா நகர், நூத்தன் செரி மாம்பாக்கம் மெயின் ரோடு, சுவாமிநாதபுரம், வாதாபி நகர் ,சபாபதி நகர், வேணுகோபால்சாமி நகர், மாருதி நகர், கிருஷ்ணா தெரு, யமுனா தெரு, கோமாதி தெரு, வைகை தெரு, வாசுகி தெரு, விவேகானந்தன் தெரு, நேதாஜி தெரு, ஐயப்பா நகர் 1 முதல் 7வது தெரு, இபி காலனி, வெங்கடாத்திரி நகர், பாலாஜி நகர், எஎல்எஸ் பசுமை நிலம், பெரியார் நகர், லட்சுமி நகர், கொம்மி அம்மன் நகர், கக்கன் தெரு.

    பல்லாவரம்: பால்சன் நிறுவனம், அண்ணாசாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எம்.ஜி.ராஜா தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, லூர்து மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு, நரசிமன் தெரு, அம்பேத்கர் தெரு, ஜெயமேரி தெரு, திரு நகர், பஜனை கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, கல்யாணிபுரம், கோயில் தெரு, சேஷா லைன், கோதண்டன் நகர்.

    சோழிங்கநல்லூர்: பள்ளிக்கரணை விஜிபி சாந்தி நகர், மனோகர் நகர், ஐஐடி காலனி, வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, அவ்வை தெரு, முத்தமிழ் நகர், அரசு கல்லூரி, பஸ் டிப்போ, அரசு மருத்துவமனை, டிஎன்எஸ்சிபி அபார்ட்மென்ட்ஸ் புதிய பிளாக், பாரதி நகர், லைட் ஹவுஸ்.

    போரூர்: சிறுகளத்தூர், கேளித்திப்பேட், நந்தம்பாக்கம், பெரியார் நகர், அஞ்சுகம்பாக்கம், மலையம்பாக்கம், குன்றத்தூர் பகுதி, பஜார் தெரு, மேத்தா நகர், மனச்சேரி, ஜி சதுக்கம்.

    ஐயப்பந்தாங்கல்: மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு , முருகன் கோவில் தெரு ,ஜெ ஜெ நகர் , அம்மன் நகர் , பி ஜி அவென்யு, இந்திரா நகர் , ஜானகியம்மாள் நகர் , சாய் நகர், விநாயகபுரம் , சொர்ணபுரி நகர்.

  • 30 Jun 2025 5:07 PM IST

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை கோட்டத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்காக, ஜூலை 1 மற்றும் 2, 2025 அன்று காலை 8 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் ரெயில் எண். 16322 கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் மற்றும் நாகர்கோவிலுக்கு இடையில் பகுதி ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, இந்த ரெயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும்.

  • 30 Jun 2025 4:27 PM IST

    பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, சட்டசபை தேர்தலில் கூட்டணி பற்றி அறிவிக்கும் அதிகாரம் டாக்டர் ராமதாஸிடமே உள்ளது என கூறினார்.

    தொடர்ந்து பேசிய அருள், அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் கூறினார். ஊடக போர்வையில் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • 30 Jun 2025 3:59 PM IST

    நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா வருகிற 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு பதிலாக, ஜூலை 19-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.

  • 30 Jun 2025 3:49 PM IST

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றி வெளியான செய்தியில், வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story