இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 May 2025 9:03 AM IST (Updated: 4 May 2025 8:07 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 3 May 2025 12:16 PM IST

    மும்பை, குஜராத் இல்லை... இந்த அணிதான் ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் - கவாஸ்கர் கணிப்பு


    நடப்பு ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணிகள் குறித்து பல முன்னணி வீரர்ர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

    அவரது கணிப்பின் படி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு' அணி கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார்.


  • 3 May 2025 12:15 PM IST

    'ஹிட் 3-யை மார்கோவுடன் ஒப்பிடும் ரசிகர்கள் - உன்னி முகுந்தன் கொடுத்த பதில்


    நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஹிட் 3' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நானியின் அற்புதமான நடிப்பும், படத்தின் இறுக்கமான கதைசொல்லலும் மக்களை ஈர்த்திருக்கின்றன.


  • 3 May 2025 12:12 PM IST

    'அக்னி நட்சத்திரம்' நாளை தொடங்குகிறது


    தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது.


  • 3 May 2025 11:08 AM IST

    ஜூன் -1ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்

    திமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 3 May 2025 11:05 AM IST

    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது

  • 3 May 2025 10:54 AM IST

    பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை


    சென்னையில் தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் முன்னிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில், பாஜக மாநில மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி. பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் மாநில கவர்னரும், பாஜக மாநில தலைவரும் தமிழச்சி சவுந்தரராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


  • 3 May 2025 10:53 AM IST

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்..? விராட் கோலி விளக்கம்


    விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து அவசரப்பட்டு ஓய்வு பெற்று விட்டதாக சுரேஷ் ரெய்னா போன்ற முன்னாள் வீரர் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? என்பது குறித்து விராட் கோலி தற்போது விளக்கமளித்துள்ளார்.


  • 3 May 2025 10:51 AM IST

    கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு


    மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து நாகை மாவட்டம் செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.


  • 3 May 2025 10:49 AM IST

    வார இறுதியில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


    இன்று தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.70,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம்ரூ.108க்கும். ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


  • 3 May 2025 10:48 AM IST

    உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வேண்டாம்: தே.மு.தி.க.வில் இருந்து விலகுவதாக நல்லதம்பி மிரட்டல்


    கடந்த மாதம் 30-ந் தேதி தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அவரிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டு, விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலாக நல்ல தம்பிக்கு கட்சியில் உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.


1 More update

Next Story