இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Oct 2025 4:09 PM IST
தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை" வள்ளலார் பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை என கவர்னர் ஆர். என்.ரவி கூறியுள்ளார்.
- 5 Oct 2025 3:13 PM IST
அஜித்குமாருக்கு உதயநிதி வாழ்த்து
கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குழு இன்னும் பல வெற்றிகளை குவிக்கட்டும் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 5 Oct 2025 3:11 PM IST
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது. டாஸின்போது இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும், பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனாவும் கைகுலுக்கிக் கொள்ளாததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே ஆடவர் கிரிக்கெட் போட்டியிலும் இரு நாட்டு கேப்டன்கள் கைகுலுக்காதது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
- 5 Oct 2025 1:50 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை தொடங்கியது.
- 5 Oct 2025 1:32 PM IST
டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- 5 Oct 2025 1:29 PM IST
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
இன்று முதல் 3 நாட்கள் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 5 Oct 2025 1:24 PM IST
திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே சேத்துப்பட்டு ஏரியில் நீச்சல் தெரியாமல் குளித்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்த யுவராஜ் (14), திசாந்த் (8) ஆகிய இருவரின் சலங்களையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
- 5 Oct 2025 1:08 PM IST
டி.டி.கே சாலை - வீனஸ் காலனியில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் - மு.க.ஸ்டாலின் ஆய்வு
மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கழிவுநீர் விரிவாக்கப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு. ஆய்வு செய்தார்.
- 5 Oct 2025 1:06 PM IST
”விஜய்யை கைதுசெய்தால்...” - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி
கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றும், இதில் யார் மீதும் பழிபோட முடியாது எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
- 5 Oct 2025 12:57 PM IST
சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து
பட்டாசு கடையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
















