”விஜய்யை கைதுசெய்தால்...” - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி


”விஜய்யை கைதுசெய்தால்...” - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 5 Oct 2025 12:32 PM IST (Updated: 5 Oct 2025 12:46 PM IST)
t-max-icont-min-icon

கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றும், இதில் யார் மீதும் பழிபோட முடியாது எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திருச்சி,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”கரூர் சம்பவத்துக்கு விஜய் தார்மீக பொறுப்பேற்று இருக்க வேண்டும். அது குற்றத்தை ஏற்பது ஆகாது. விஜய்யை கைதுசெய்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் இந்த விவகாரத்தில் முதல்வர் நிதானமாக செயல்படுகிறார். மு.க.ஸ்டாலின் அனுபவமிக்க தலைவராக உள்ளார். விஜய்யை கைதுசெய்தால், அது மற்ற கட்சிகளையும் பாதிக்கும். நியாயமான விஷயத்தை கூறினால், முதல்வருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுகிறார்கள்.

கரூர் சம்பவத்தை வைத்து தவெகவுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உயிரிழப்பு நேரத்தில் நரித்தனமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை கண்டிக்கிறோம். தவெகவை கூட்டணிக்குள் கொண்டுவர ஆளுங்கட்சி மீது எடப்பாடி பழனிசாமி பழி போடுகிறார். கரூர் சம்பவம் ஒரு விபத்துதான். இதில் யார் மீதும் பழிபோட முடியாது.பழனிசாமியை தவிற, குமாரசாமி, குப்புசாமி யார் வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளராகலாம். 2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகத்தை வீழ்த்துவோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story