இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Oct 2025 12:55 PM IST
டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அவரை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம் - ஜடேஜா பேட்டி
போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் கூறியதாவது. டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அஸ்வினை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம். பல ஆண்டாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் என்று கூறினார்.
- 5 Oct 2025 12:53 PM IST
இந்தோனேசியாவில் மதப்பள்ளி இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
இடிபாடுகளில் சிக்கிய 104 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 5 Oct 2025 12:14 PM IST
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வெற்றி - கேப்டன் சுப்மன் கில் கூறியது என்ன..?
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
- 5 Oct 2025 12:12 PM IST
டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு; 14 பேர் உயிரிழப்பு
நிலச்சரிவு காரணமாக டார்ஜிலிங்கில் இருந்து சிக்கிம் செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நவராத்திரி விடுமுறையை கொண்டாட டார்ஜிலிங் சென்ற ஏராளமான சுற்றுலா பயணிகள், தற்போது அங்கேயே சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- 5 Oct 2025 12:03 PM IST
இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் பலியான சம்பவம்: மத்திய சுகாதார செயலாளர் அவசர ஆலோசனை
ராஜஸ்தானில் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் இறந்த விவகாரத்தில், மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
- 5 Oct 2025 12:01 PM IST
’வள்ளலாரை போற்றி வணங்குவோம்’ - நயினார் நாகேந்திரன்
அன்பான வழிபாடே, கடவுளின் அருளை பெறும் மார்க்கம் எனும் தத்துவத்தை உலகிற்கு அளித்தவர் வள்ளலார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- 5 Oct 2025 12:00 PM IST
கரூர் கோர சம்பவம்.. சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்ப்பு
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- 5 Oct 2025 10:53 AM IST
”கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார்” - மு .க.ஸ்டாலின் பதிவு
வள்ளலாரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 5 Oct 2025 10:51 AM IST
தனிப்படை போலீசார் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
- 5 Oct 2025 10:49 AM IST
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண நடைமுறையில் புதிய மாற்றம்
நாடு முழுவதும் அடுத்த மாதம் 15ம் தேதி முதல், பணம் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை செலுத்தினால் வழக்கமான தொகையை விட இருமடங்கு கூடுதல் தொகையை தர வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஸ்டேக் முறையில் இருந்து விடுபட்டவர்களை அதற்குள் சேர்க்கும் பொருட்டு இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
















