இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Nov 2025 9:53 AM IST
பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 46 பேர் பலி
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, அந்நாட்டின் சிபு தீவில் உள்ள நகரங்கள் மீது சூறாவளி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 5 Nov 2025 9:50 AM IST
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு: வடமாவட்டங்களுக்கு பாதிப்பா..?
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.
- 5 Nov 2025 9:47 AM IST
தவெக சிறப்பு பொதுக்குழு இன்று கூடுகிறது: முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்க வாய்ப்பு
விஜய்யின் பேச்சை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்காக, அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
- 5 Nov 2025 9:45 AM IST
ராசிபலன் (05.11.2025): மணமாகாத இந்த ராசிக்காரர்களுக்கு துணை தேடி வரும்..!
ரிஷபம்
கலைஞர்கள் தங்கள் படங்களில் வெற்றி காண்பார்கள். தம்பதிகளிடத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். கண் பிரச்சினை தோன்றும். ஒரு முறை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்












