பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 46 பேர் பலி


பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 46 பேர் பலி
x
தினத்தந்தி 5 Nov 2025 8:54 AM IST (Updated: 5 Nov 2025 2:40 PM IST)
t-max-icont-min-icon

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ்.

மணிலா,

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, அந்நாட்டின் சிபு தீவில் உள்ள நகரங்கள் மீது சூறாவளி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல பகுதிகளில் சாலை, மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையும் பெய்வதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி சூறாவளியில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப்பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story