இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Dec 2025 9:12 AM IST
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- 5 Dec 2025 9:11 AM IST
4-வது நாளாக தொடரும் குளறுபடி: இண்டிகோ விமானங்கள் ரத்தால் பரிதவிக்கும் பயணிகள்
சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது.
- 5 Dec 2025 9:10 AM IST
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 5 Dec 2025 9:09 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 5 Dec 2025 9:08 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
- 5 Dec 2025 9:07 AM IST
"மக்களால் நான்.. மக்களுக்காக நான்".. ஜெயலலிதா எனும் பெண் ஆளுமை! - இன்று 9-வது நினைவு தினம்
"மக்களால் நான்.. மக்களுக்காக நான்" என்ற கர்ஜனை குரலுக்கு சொந்தக்காரர், ஜெயலலிதா. அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க. தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகிறார்.
- 5 Dec 2025 9:05 AM IST
இன்றைய ராசிபலன் (05.12.2025): மணமாகாதவர்களுக்கு துணை தேடி வரும்
கும்பம்
சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். வீட்டு பிராணிகளை வளர்க்க ஆர்வம் கொள்வீர். உடல் நிலை மேம்படும். அரசியல்வாதிகள் மக்களிடம் பேராதரவை பெறுவர். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மதிப்பெண்கள் எடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம் ரோஸ்













