இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026


தினத்தந்தி 6 Jan 2026 9:10 AM IST (Updated: 7 Jan 2026 9:03 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 6 Jan 2026 12:00 PM IST

    பிரபல மலையாள நடிகர் புன்னப்ரா அப்பச்சன் காலமானார் 


    வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக புன்னப்ரா அப்பச்சன் உயிரிழந்தார்.

  • 6 Jan 2026 11:22 AM IST

    முகம்மது சிராஜ் அதிர்ஷ்டம் இல்லாதவர்; வெளிப்படையாக சொன்ன டி வில்லியர்ஸ் 


    முகமது சிராஜுக்கு அணியில் இடம் கிடைக்காதது குறித்து டி வில்லியர்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • 6 Jan 2026 11:19 AM IST

    ’என்னை சதி பண்ணி வெளிய அனுப்பிட்டாங்க...’- பிக்பாஸ் நந்தினி பரபரப்பு பேட்டி 


    பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 4 நாட்களில் வெளியேறிய நந்தினி பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், “விஜய் சேதுபதி போட்டியாளர்கள மதிக்கிறதே இல்ல. அவமதிக்கிறாரு. கமல் சார் இருந்த வர அவர் நல்லா கொண்டு போனாரு. ஆனா இவரு சரியில்ல. பேசாம இவரே உள்ள போய் போட்டியாளரா விளையாடலாம். என்றார். இவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • 6 Jan 2026 11:15 AM IST

    ஆந்திராவில் 2ஆவது நாளாக எரியும் ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் கிணறு 


    ஆந்திராவின் கோணசீமா மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு பெரும் தீ விபத்தாக மாறியது.

  • 6 Jan 2026 11:05 AM IST

    தனிநபர் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் 

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    இதன்படி இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:-

    கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பது அர்த்தமற்றது. பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு அரசே காரணம். தீபமேற்றும் இடத்தை தர்காவிற்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றுவது குறித்து பரிசீலிக்க முந்தைய உத்தரவுகள் உள்ளன.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும். மத்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன் மலை உச்சியில் உள்ள தூணில் கோயில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும். ஒவ்வொரு கார்த்திகையின்போதும் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது.

    மாவட்ட நிர்வாகம் தீபம் ஏற்ற உதவி செய்ய வேண்டும். தனிநபர் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது. தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர்தான் தீபம் ஏற்ற வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது. 

  • 6 Jan 2026 10:57 AM IST

    இசையால் எட்டுத்திக்கும் ஆளும் ஏஆர் ரகுமான்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து 


    ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ராகுமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

  • 6 Jan 2026 10:55 AM IST

    வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ் 

    அமெரிக்க ராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, ஆர்.புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  • 6 Jan 2026 10:50 AM IST

    திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட்டு

    மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், சட்டம். ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்து தீபம் ஏற்றப்படவில்லை. தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விரிவாக விசாரித்தனர்

    இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜெ.ஜெயச்சந்திரன், கே கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கினர். அப்போது தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு செல்லும் என்றும் ,தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் மேற்பார்வை இட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

  • 6 Jan 2026 10:42 AM IST

    ஒரே ஓவரில் 34 ரன்கள்...மஹாராஜ் பந்தை பறக்கவிட்ட பேர்ஸ்டோ - ‘எஸ்ஏ20’ தொடரில் புதிய சாதனை 


    இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு குவிண்டன் டீ காக் அதிரடியாக ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ பிரிட்டோரியா பவுலர்களை பந்தாடினார். அப்போது கேசவ் மகாராஜ் 12வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஜானி பேர்ஸ்டோ 34 ரன்களை குவித்தார். 

  • 6 Jan 2026 10:39 AM IST

    8-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின் 


    ஜன.8ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

1 More update

Next Story