இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 Jan 2026 10:39 AM IST
திருப்பரங்குன்றம் தீப வழக்கில், இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு
ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜெ.ஜெயச்சந்திரன், கே கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்க உள்ளனர்.
- 6 Jan 2026 10:11 AM IST
16 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்த பொல்லார்ட்...
2010க்குப்பின் தொடர்ந்து 13 வெற்றிகளுக்குப் பின் முதல் முறையாக பொல்லார்ட் ஒரு டி20 தொடரின் பைனலில் தோல்வியை சந்தித்துள்ளார். கடைசியாக 2010 ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பைக்காக தோற்ற அவர் 16 வருடங்கள் கழித்து இப்போட்டியில் தோற்றது குறிப்பிடத்தக்கது.
- 6 Jan 2026 10:09 AM IST
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
ஈரோடு - கரூர் இடையே சாவடிப்பாளையம், ஊஞ்சலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் 6-ந் தேதி, 13-ந் தேதி, 17-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்சி- ஈரோடு, செங்கோட்டை- ஈரோடு, ஈரோடு -செங்கோட்டை ஆகிய ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதில் திருச்சி - ஈரோடு (வண்டி எண்.56809) ரெயில் காலை 7 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர் வரை இயக்கப்படுகிறது. அதாவது கரூர் முதல் ஈரோடு வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- 6 Jan 2026 10:07 AM IST
சின்ன சின்ன ஆசையில் தொடங்கிய பயணம்..34 ஆண்டுகளாக இசை உலகை ஆளும் இசைப்புயல்
இசை உலகில் தனி சாம்ராஜ்யமே நடத்திக்கொண்டு இருக்கும் ஏ.ஆர். ரகுமான், இன்னும் பல விருதுகளை வென்று இசை வெள்ளத்தில் ரசிகர்களை தொடர்ந்து மெய்மறக்க வைக்கிறார். அவரது பிறந்த நாளான இன்று, அவரை வாழ்த்துவோம்.
- 6 Jan 2026 10:06 AM IST
'ஜனநாயகன்' படம் வெளியாவதில் சிக்கல்.. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தி!
இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- 6 Jan 2026 10:03 AM IST
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாடி(81) புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்
- 6 Jan 2026 10:02 AM IST
டெல்லியில் தொடரும் காற்று மாசு; காற்றின் தரம் 281 ஆக பதிவு
டெல்லியில் தொடரும் காற்று மாசால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
- 6 Jan 2026 10:01 AM IST
ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அச்சம்
ஜப்பானில் டோஹோகு நகரில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால், கார்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.
- 6 Jan 2026 10:00 AM IST
இந்தோனேசியாவில் கனமழை: திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் பலி
இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
- 6 Jan 2026 9:58 AM IST
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் இன்றும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.580 உயர்ந்து ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில் ரூ.2,71,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.


















