இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Jan 2026 9:41 AM IST
சென்னை புத்தகக் காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.
- 8 Jan 2026 9:40 AM IST
“தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக..” முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து வெல்வோம் ஒன்றாக என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 8 Jan 2026 9:39 AM IST
சென்னை எழும்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
- 8 Jan 2026 9:38 AM IST
விஜய்யின் “ஜனநாயகன்” படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு: நாளை தீர்ப்பு வெளியாகுமா..?
ஜனநாயகன் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டதை அதன் பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- 8 Jan 2026 9:36 AM IST
மேலும் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா..?
தமிழ்நாட்டில் ஜன.9, 10 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 8 Jan 2026 9:35 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் பணி இன்று தொடக்கம்
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
- 8 Jan 2026 9:34 AM IST
இன்றைய ராசிபலன் (08.01.2026): நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்..!
கன்னி
உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தோல்வி பயம் நீங்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை













