இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Nov 2025 1:00 PM IST
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் கடும் நடவடிக்கை - சென்னை கலெக்டர்
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 8 Nov 2025 12:59 PM IST
“தி பேமிலி மேன் 3” வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது!
தி பேமிலி மேன்' வெப் தொடரின் 3ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரிலும் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் மற்றும் டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்.
- 8 Nov 2025 12:57 PM IST
குருவாயூர் கோவிலில் மீண்டும் ரீல்ஸ் வீடியோ - இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப்பதிவு
கிருஷ்ணர் குறித்த ஓவியங்களை வரையும் ஜஸ்னா சலீம் என்ற பெண், குருவாயூர் கோவிலுக்கு சென்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
- 8 Nov 2025 12:56 PM IST
ஐ.பி.எல்.: சாம்சனை வாங்க சிஎஸ்கே மீண்டும் பேச்சுவார்த்தை - தகவல்
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் சாம்சன், ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற உள்ளார்.
- 8 Nov 2025 12:31 PM IST
ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுக... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுகவைப்போல வெற்றி பெறுவோம் என சில அறிவிலிகள் பகல் கனவு காண்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 8 Nov 2025 12:29 PM IST
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் செய்த பணியை உதயநிதி செய்வதால் பெருமை - மு.க.ஸ்டாலின்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த திமுக 75 அறிவுத் திருவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஏதோ கட்சியை தொடங்கினோம். அடுத்த முதல்-அமைச்சர் நான்தான் என்று அறிவித்து ஆட்சிக்கு வரவில்லை. வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டுகிறார்கள். திமுகவை அழிக்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாது. திமுகவைப் போல வெற்றி பெறுவோம் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள். திமுகவைப் போல் வெற்றிபெற திமுகவை போன்ற அறிவும் உழைப்பும் தேவை.
உதயநிதியின் கொள்கை பிடிப்பான செயல்பாடுகளை பார்க்கிறபோது வள்ளுவர் சொல்வது போல, ‘மகன் தன் தந்தைக்கு ஆற்றும் உதவி' என்ற குறளை போல உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார். தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் செய்த பணியை உதயநிதி செய்வதால் பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
- 8 Nov 2025 12:06 PM IST
மாதம் ரூ.4 லட்சம் போதாது - முகமது ஷமியின் முன்னாள் மனைவி மனு
முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான், தனக்கும் தங்கள் மகளுக்கும் வழங்கப்படும் ஜீவனாம்ச தொகையை அதிகரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, மாதத்திற்கு ரூ.4 லட்சம் என்பது ஏற்கனவே அதிகம் இல்லையா? என்று கேட்டது. இருப்பினும் உச்ச நீதிமன்றம், முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- 8 Nov 2025 12:03 PM IST
"தன் பெயரில் போலி அழைப்புகள்" - எச்சரித்த நடிகை ருக்மிணி வசந்த்
'காந்தாரா' படத்தைத் தொடர்ந்து, இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறியிருக்கிறார் ருக்மினி வசந்த். ராஷ்மிகா மந்தனாவைத் தொடர்ந்து 'நேஷனல் கிரஷ்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தற்போது நடிகர் யாஷுடன் இணைந்து டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- 8 Nov 2025 11:50 AM IST
தெலுங்கானா முதல்-மந்திரி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 8 Nov 2025 11:30 AM IST
சர்வதேச கிரிக்கெட்: இன்னும் 1 விக்கெட்.. வரலாற்று சாதனை படைக்க உள்ள பும்ரா
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் (முதல் போட்டி மழையால் ரத்து) தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.




















