இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Nov 2025 11:11 AM IST
நடிகர் ரஜினியின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
- 8 Nov 2025 11:09 AM IST
இந்தியாவுக்கு எதிரான தோல்வி: பாகிஸ்தானை கிண்டலடித்த முன்னாள் வீரர்
இந்தியா வெற்றி பெற்றதால் பாகிஸ்தானை கிண்டலடிக்கும் விதமாக இந்திய முன்னாள் வீரரான பிரியங்க் பஞ்சால் தனது எக்ஸ் பக்கத்தில் 5 வார்த்தையில் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'வழக்கம் போல பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டது' என்று பதிவிட்டுள்ளார்.
- 8 Nov 2025 11:06 AM IST
பெண்கள் பாதுகாப்பில் திராவிட மாடல் அரசு எந்த சமரசத்துக்கும் இடம்கொடுக்காது - ஆர்.எஸ்.பாரதி
விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி வெட்கித் தலைகுனிய வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
- 8 Nov 2025 11:04 AM IST
4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 8 Nov 2025 11:02 AM IST
47 வயதிலும் இளமையாக இருக்க இதுதான் காரணம்: மஞ்சு வாரியர் பகிர்ந்த ரகசியம்
மலையாள சினிமா கொண்டாடும் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். மோகன்லால், மம்முட்டி என முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்த இவர் தமிழில் 'அசுரன்'. 'துணிவு', 'விடுதலை-2', 'வேட்டையன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
- 8 Nov 2025 10:58 AM IST
‘ஆபரேஷன் சிந்தூர்’ நமது ராணுவ திறனை உலகிற்கு எடுத்துக்காட்டியது - முன்னாள் ராணுவ தளபதி நரவனே
‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரு மிகப்பெரிய திருப்புமுனை நடவடிக்கையாக மாறியுள்ளது என மனோஜ் நரவனே தெரிவித்துள்ளார்.
- 8 Nov 2025 10:56 AM IST
தூய்மையற்ற நகரங்களில் மதுரை முதலிடம்: இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை - சீமான்
கழிவுநீராலும், குப்பைகளாலும் நிரம்பி தமிழ்நாடே குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
- 8 Nov 2025 10:37 AM IST
தி.மு.க. சார்பில் அறிவுத் திருவிழா
திமுகவின் 75ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவுத் திருவிழா தொடங்கியது. அறிவுத் திருவிழா நிகழ்வில் முற்போக்கு புத்தகக் காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ எனும் தலைப்பில் நடைபெறும் 2 நாட்கள் கருத்தரங்கத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
- 8 Nov 2025 10:27 AM IST
டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டன.
தினமும் 1,550-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 8 Nov 2025 10:20 AM IST
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: இந்திய அணி தொடர்ந்து 2-வது தோல்வி
இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் யுஏஇ உடன் மோதியது. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிமன்யு மிதுன் 50 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 42 ரன்களும் அடித்தன. யுஏஇ தரப்பில் நிலான்ஷ் கேஸ்வானி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.




















