இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Oct 2025 1:20 PM IST
சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இருந்து பாரதி கண்ணன் நீக்கம்
சென்னையில் 9ம் வகுப்பு மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு தொடர்பாக துணை நடிகர் பாரதி கண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாரதி கண்ணன் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்து சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- 10 Oct 2025 1:18 PM IST
கிருஷ்ணகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், தேனி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், தென்காசி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 10 Oct 2025 12:57 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை ஐகோர்ட்டு எப்படி விசாரிக்கலாம்? என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
- 10 Oct 2025 12:04 PM IST
முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.பி. அணை - விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி. அணையில் நீரின் அளவு முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதன்காரணமாக உபரிநீர் திறப்பால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 10 Oct 2025 11:58 AM IST
நாகேந்திரன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி ஐகோர்ட்டில் மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
- 10 Oct 2025 11:57 AM IST
சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது
சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 10 Oct 2025 11:56 AM IST
ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணையும் ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் எம்.பி. - பரபரக்கும் பீகார் தேர்தல் களம்
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதியும், இரண்டாம்கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
- 10 Oct 2025 11:54 AM IST
மகேஷ் பாபு - ஜூனியர் என்.டி.ஆருக்காக இரவும் பகலும் வேலை பார்க்க தயார் - பிரபல நடிகை
திரைத்துறையில் தொடர் வெற்றிகளை பெற்று வரும் இவர், தற்போது 'தெலுசு கடா' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- 10 Oct 2025 11:14 AM IST
திரிஷாவுக்கு திருமணமா?... தீயாக பரவும் தகவல்
படங்களை தாண்டி திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் அடிக்கடி இணையத்தில் பேசப்படுவது வழக்கம். இந்தநிலையில், திரிஷாவின் திருமண செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
- 10 Oct 2025 11:03 AM IST
கூட்ட நெரிசல் சம்பவம்: கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை
கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















