இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Dec 2025 10:13 AM IST
எனக்கு எதிராக கூட்டு சதி நடந்து இருப்பதாக சந்தேகம் உள்ளது: நடிகர் திலீப் பேட்டி
விசாரணை அதிகாரிகள் தங்களது சுயலாபத்திற்காக, என்னை பலிகடா ஆக்கி விட்டார்கள் என நடிகர் திலீப் கூறியுள்ளார்.
- 10 Dec 2025 10:12 AM IST
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் 16 நாள் மட்டுமே வேலை - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் திட்டமாகவே தொடர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
- 10 Dec 2025 10:11 AM IST
பெண்மையை இழிவு படுத்தியதாக புகார் எதிரொலி: சினிமா இயக்குனர் மீது வழக்குப்பதிவு
திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார், குஞ்சு முகமது மீது ஜாமீன் இல்லாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
- 10 Dec 2025 10:09 AM IST
சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்: கார் மீது மோதி விபத்து
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரில் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் நேற்று இரவு சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- 10 Dec 2025 10:08 AM IST
கோவை செம்மொழிப் பூங்கா: நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி
செம்மொழிப் பூங்காவில் மூலிகை தோட்டம், பசுமை வனம் உள்ளிட்ட பல வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- 10 Dec 2025 10:07 AM IST
அதிமுக பொதுக்குழு: உணவு பட்டியல் வெளியீடு
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு சைவ, அசைவ உணவு அளிக்கப்பட உள்ளது. அதற்கான உணவு பட்டியல் வெளியாகியுள்ளது. காலை உணவு 3,000 பேருக்கு. மதிய உணவு சைவத்தில் 2,000 பேருக்கும். அசைவத்தில் 8,000 பேருக்கும் உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.
- 10 Dec 2025 10:05 AM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் ஜெர்மனி-ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- 10 Dec 2025 10:04 AM IST
இந்திய கிரிக்கெட்டில் முதல் வீரர்: வரலாற்று சாதனை படைத்த பும்ரா
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
- 10 Dec 2025 9:59 AM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,030-க்கும், சவரன் ரூ.96,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 10 Dec 2025 9:17 AM IST
நிர்மலா சீதாராமனுடன் திமுக எம்.பி. அருண் நேரு சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை திமுக எம்.பி. அருண் நேரு நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது மக்கள் பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றை நிர்மலா சீதாராமனிடம் அவர் வழங்கினார்.
















