இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Dec 2025 10:05 AM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் ஜெர்மனி-ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- 10 Dec 2025 10:04 AM IST
இந்திய கிரிக்கெட்டில் முதல் வீரர்: வரலாற்று சாதனை படைத்த பும்ரா
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
- 10 Dec 2025 9:59 AM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,030-க்கும், சவரன் ரூ.96,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 10 Dec 2025 9:17 AM IST
நிர்மலா சீதாராமனுடன் திமுக எம்.பி. அருண் நேரு சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை திமுக எம்.பி. அருண் நேரு நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது மக்கள் பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றை நிர்மலா சீதாராமனிடம் அவர் வழங்கினார்.
- 10 Dec 2025 9:16 AM IST
தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்...?
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கிருந்து விலகி வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
- 10 Dec 2025 9:14 AM IST
விஜய் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய், நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
- 10 Dec 2025 9:13 AM IST
நீலகிரியில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி அரசு அரசாணை வெளியீடு
நீலகிரியில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- 10 Dec 2025 9:12 AM IST
2வது நாளாக முழு கொள்ளளவில் நீடிக்கும் புழல் ஏரி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- 10 Dec 2025 9:10 AM IST
தேர்தலில் போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விருப்பமனு வினியோகம்; இன்று தொடங்குகிறது
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விருப்பமனு வினியோகத்தை இன்று தொடங்குகிறது.
- 10 Dec 2025 9:08 AM IST
திமுகவின் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' இன்று தொடக்கம்
திமுகவினரின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி எனும் பிரசாரம் இன்று தொடங்க உள்ளது. தேனாம்பேட்டையில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் பிரசாரம் மாநிலம் முழுவதும் இன்று தொடங்க உள்ளது.
















