இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Oct 2025 1:03 PM IST
22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம்
22 குழந்தைகளை பலி கொண்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- 12 Oct 2025 12:59 PM IST
யானைக் கூட்டம் முகாம்: சுருளி அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு செல்லும் சாலைப் பகுதியில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளதால், அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- 12 Oct 2025 12:32 PM IST
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
‘தமிழகம் தலைநிமிர தமிழனின்' பயணத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரையில் தொடங்கும் நிலையில், மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- 12 Oct 2025 12:09 PM IST
எகிப்தில் நாளை காசா அமைதி ஆலோசனை கூட்டம்: டிரம்ப் தலைமை ஏற்கிறார்...!
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
- 12 Oct 2025 12:08 PM IST
என் வாழ்க்கையிலும் 2 காதல் கதைகள் உள்ளன - பிரபல நடிகை
பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்த இந்த காதல் கதை அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. ரிலீசுக்கு முன்னதாக, ராசி கன்னா ஊடகங்களுடன் உரையாடினார். அப்போது அவர் தனக்கு 2 காதல் இருந்ததாக கூறினார்.
- 12 Oct 2025 11:59 AM IST
அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் கடிதம்
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் UPI மூலம் கல்விக்கட்டணங்கள் செலுத்துவதை ஊக்குவிக்க மாநில அரசுகள், NCERT, CBSE, KVS உள்ளிட்ட அமைப்புகளுக்கு கல்வி அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.
பணம் செலுத்துவதில் வெளிப்படைத் தன்மை, பெற்றோர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கல்விக் கட்டணம் செலுத்துவது போன்ற பல நன்மைகள் உள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 Oct 2025 11:19 AM IST
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் டிசம்பர் 8ம் தேதி குடமுழுக்கு
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து வரும் டிசம்பர் 8ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நடைபெறும் குடமுழுக்கிற்காக, சமீபத்தில் சுமார் ரூ.26 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார்.
- 12 Oct 2025 11:00 AM IST
கள்ளக்காதல் மோகம்...வாலிபரின் உயிரை பறித்த சோகம்.. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்
கல்யாணம் முடிந்தும் அடங்காமல் பெண்மீது கொண்ட கள்ளக்காதல் மோகம் வாலிபரின் உயிரை பறித்தது.
- 12 Oct 2025 10:59 AM IST
கோவை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞர்கள் கைது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவிந்தபுரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் பெண் செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
- 12 Oct 2025 10:58 AM IST
தினமும் அதை செய்ய வேண்டும்...அதுவும் உடற்பயிற்சிதான் - வைரலாகும் பிரபல நடிகையின் கருத்து
இவர் கூறிய கருத்துகள் இப்போது திரையுலகத்தையே உலுக்கியுள்ளன.



















