இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 Jun 2025 9:33 AM IST
3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்: சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக மேற்கு ஆசியாவில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடானா சைப்ரஸ், கனடா மற்றும் குரேஷியா ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார்.
பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளாக இன்று மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் செல்கிறார். இதற்காக அவர் இன்று காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சைப்ரஸ் புறப்பட்டார்.
- 15 Jun 2025 9:31 AM IST
70 இடங்களுக்கு 2½ லட்சம் பேர் போட்டி: இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு
குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு இன்று (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கூடுதலாக 6 தாலுகாக்களிலும் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது.
- 15 Jun 2025 9:29 AM IST
கன்னி
வாகன பராமரிப்பு செலவு சற்று அதிகமாகும். கவனமுடன் வாகனத்தை பயன்படுத்துவது நல்லது. கால், கை மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் கருநீலம்









