இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025


தினத்தந்தி 15 Oct 2025 10:01 AM IST (Updated: 16 Oct 2025 9:33 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 15 Oct 2025 12:58 PM IST

    கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்


    கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (வயது 80). இவர் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார்.


  • 15 Oct 2025 12:56 PM IST

    சீனாவுக்கு உளவு வேலை... இந்திய வம்சாவளி வெளியுறவு கொள்கை நிபுணர் அமெரிக்காவில் கைது


    ஆஷ்லேவுக்கு எதிரான இந்த வழக்கில், அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.


  • 15 Oct 2025 12:46 PM IST

    தமிழகத்தில் 21ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


    தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 15 Oct 2025 12:40 PM IST

    சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு

    கரூர் சம்பவம் குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றநிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற அவைக் காவலர்களை சபாநாயகர் அழைத்த நிலையில், சபாநாயகரை கண்டித்து முழக்கமிட்டபடியே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

  • 15 Oct 2025 12:13 PM IST

    முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம் - எடப்பாடி பழனிசாமி

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கூறியதாவது:-

    முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது

    இவ்வாறு அவர் கூறினார். 

  • 15 Oct 2025 11:56 AM IST

    சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்


    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.


  • 15 Oct 2025 11:55 AM IST

    “பீகார் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்..” - பிரசாந்த் கிஷோர்


    நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக வரமாட்டார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.


  • 15 Oct 2025 11:27 AM IST

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்



    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து வருகிறார்.

    அவர் கூறியதாவது:-

    கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது. பிரசாரத்திற்கு தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறி விட்டனர். கரூரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் என 606 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    வழக்கமாக அரசியல் பரப்புரைக் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காவலர்கள் எண்ணிக்கையைவிட கரூர் பரப்புரையின்போது அதிகமாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.  

  • 15 Oct 2025 10:36 AM IST

    மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?


    சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை நீடிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 15 Oct 2025 10:33 AM IST

    தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’

    தமிழ்நாட்டில் அக்டோபர் 15ந் தேதி முதல் 21ந் தேதி வரை 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story