இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 May 2025 3:57 PM IST
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றது அமலாக்கத்துறை. விசாகன் வீட்டில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
- 16 May 2025 3:56 PM IST
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது.
- 16 May 2025 3:55 PM IST
உதகையில் கனமழை
உதகையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கமர்சியல் சாலை, மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரெயில் நிலைய ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் சிக்கின. ரெயில் நிலையம் அருகே இருப்பு பாதை காவல் நிலைய வளாகம் மழைநீரால் சூழ்ந்தது.
- 16 May 2025 3:50 PM IST
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
- 16 May 2025 2:28 PM IST
11-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் விவரம் வெளியீடு
11-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் காலையில் வெளியான நிலையில் தற்போது மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
- 16 May 2025 2:28 PM IST
ஒசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பஸ்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 5 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- 16 May 2025 1:48 PM IST
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான்
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
- 16 May 2025 1:45 PM IST
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்காக செயல்படும் அரசு உண்டு உறைவிட பள்ளியில் 10ம் வகுப்பு எழுதிய 3 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- 16 May 2025 1:41 PM IST
9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி, திருவள்ளுர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 16 May 2025 12:36 PM IST
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அங்கீகரிக்கப்படாத கட்சிகள், வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.