இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 May 2025 12:34 PM IST
மே 24-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
- 16 May 2025 11:51 AM IST
பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 152 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும், 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16 May 2025 11:28 AM IST
சென்னை அண்ணாநகரில் குடிபோதையில் மளிகை கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய இயக்குனர் கௌதமனின் மகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
- 16 May 2025 11:25 AM IST
சிங்கத்தின் கால்கள் பழுதானாலும் சீற்றம் குறையாது - ராமதாஸ்
தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மாநாடு களைப்பில் சிலர் உள்ளதால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. பாமகவில் கோஷ்டி மோதல் கிடையாது. சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் பாமக வெற்றி பெறும். கூட்டத்தில் பங்கேற்க செயல் தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வரலாம், வந்து கொண்டிருக்கலாம் என்று கூறினார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கவுரவத்தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், எம்.எல்.ஏ அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- 16 May 2025 11:09 AM IST
உலகப்பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்காக மதுரை சென்ற கள்ளழகர் மீண்டும் அழகர்மலைக்கு வந்தடைந்தார் . மலர்கள் தூவி, கோவிந்தா என முழக்கமிட்டு கள்ளழகரை பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்றனர்.
- 16 May 2025 11:06 AM IST
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 97.05 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மத்திய சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகளில் 56 ஆண்கள், 9 பெண்கள் என அனைவரும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- 16 May 2025 11:05 AM IST
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை என தகவல்
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலர்கள் கூட்டம் தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சில மாவட்ட தலைவர்கள், செயலர்கள் பங்கேற்பு அன்புமணி உள்பட பல பாமக மாவட்ட தலைவர்கள், செயலர்கள் கூட்டத்துக்கு இதுவரை வரவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கெளரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. மொத்தமாக 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 15 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
- 16 May 2025 10:43 AM IST
முதியவரை தாக்கிய அரசு பஸ் ஓட்டுநர்,நடத்துனர்
சென்னையை அடுத்த வண்டலூரில் மாநகர பஸ்சில் ஏறிய முதியவரை ஓட்டுநர், நடத்துநர் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. வண்டலூரில் முதியோருக்கான பாஸ் எடுத்து, சம்பந்தப்பட்ட முதியவர் பஸ்சில் ஏறியதாக கூறப்படுகிறது. பஸ்சில் முதியோர் இருக்கையில் அமர்ந்தவரை நடத்துநர் இங்கே அமரக்கூடாது என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. பஸ்சில் ஏறிய முதியவருக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- 16 May 2025 10:08 AM IST
சவரனுக்கு ரூ.880 உயர்ந்த தங்கம் விலை
ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 16 May 2025 9:32 AM IST
பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்-1 பொதுத் தேர்வுவில் 4,03,949 மாணவியரும், 3,39,283 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 மாணவர்களை விட 6.43 சதவீத மாணவியர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.













