இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 Dec 2025 8:57 AM IST
10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை கண்டிப்பாக அதிகரித்து காட்ட வேண்டும் என்ற முனைப்பில் பள்ளிக்கல்வித் துறை களம் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பல மாவட்டங்கள் தேர்ச்சி சதவீத பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தன. தலைநகராம் சென்னை தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது.
- 17 Dec 2025 8:56 AM IST
இந்தியில் மசோதாக்களின் பெயர்கள்: ப.சிதம்பரம் கண்டனம்
இந்தி வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருவதை எதிர்க்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- 17 Dec 2025 8:55 AM IST
7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி. தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 17 Dec 2025 8:53 AM IST
சென்னை நங்கநல்லூரில் கட்டுவது 2-வது ஹஜ் இல்லமா? - தமிழக அரசு விளக்கம்
சென்னை சூளையில் ஏற்கனவே ஹஜ் இல்லம் செயல்பட்டு வருவதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
- 17 Dec 2025 8:52 AM IST
நிதிஷ்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்
பெண் டாக்டரின் ஹிஜாப்பை முதல்-மந்திரி நிதிஷ் குமார் வலுக்கட்டாயமாக விலக்கிய வீடியோ கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 17 Dec 2025 8:50 AM IST
புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை அணிக்கு நன்றி; சர்பராஸ் கான்
மினி ஏலத்தில் தன்னை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சர்பராஸ் கான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், எனக்கு புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.
- 17 Dec 2025 8:49 AM IST
ஆஷஸ் 3வது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
- 17 Dec 2025 8:47 AM IST
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று 4-வது 20 ஓவர் போட்டி; தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி...
இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்கு முன்னர் நடந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 117 ரன்னில் இந்திய அணி சுருட்டி அசத்தியது.
- 17 Dec 2025 8:45 AM IST
இன்றைய ராசிபலன் (17-12-2025): புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்..!
விருச்சிகம்
வெளியே செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் மூலம் அபராதத்தினை தவிர்க்கலாம். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை















