இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்
Live Updates
- 18 Nov 2025 5:49 PM IST
அனுமனை தவறாக பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது போலீசில் புகார்
ராஜமவுலி இந்துக்கடவுளான அனுமனைக் குறித்து ‘வாரணாசி’ பட விழாவில் பேசியதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- 18 Nov 2025 5:12 PM IST
சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து ஆந்திராவுக்கு சிறப்பு ரெயில்
சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆந்திராவிலுள்ள சத்ய சாய் பி நிலையத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- 18 Nov 2025 5:11 PM IST
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: முன்னணி வீரர் விலகல்.. நியூசிலாந்துக்கு பின்னடைவு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.
- 18 Nov 2025 5:09 PM IST
கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் நேருக்கு நேர் ஒன் டூ ஒன் முறையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- 18 Nov 2025 5:05 PM IST
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிப்பா? - வெளியான தகவல்
கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
- 18 Nov 2025 5:03 PM IST
"தோல்விக்கு நானே பொறுப்பு.. அரசியலை விட்டு வெளியேறப் போவதில்லை" - பிரசாந்த் கிஷோர்
பீகார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வரும் 20-ம் தேதி காந்தி ஆசிரமத்தில் ஒருநாள் மவுன விரதம் இருக்கப்போவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
- 18 Nov 2025 4:48 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18 Nov 2025 4:18 PM IST
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை நிராகரித்த மத்திய அரசு?
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழ்நாடு அரசு அனுப்பிய திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 18 Nov 2025 4:12 PM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சேத்துப்பட்டு, தி.நகர், மெரினா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
- 18 Nov 2025 4:11 PM IST
ஐ.பி.எல். 2026: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் அறிவிப்பு
அடுத்த ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
















