வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: முன்னணி வீரர் விலகல்.. நியூசிலாந்துக்கு பின்னடைவு

image courtesy:PTI
ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வெலிங்டன்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து நியூசிலாந்து முன்னணி வீரரான டேரில் மிச்செல் விலகியுள்ளார். முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.
இவரது விலகல் நியூசிலாந்து அணிக்கு பலத்த பின்னடைவாக கருதபப்டுகிறது. ஏனெனில் முதல் போட்டியில் சதமடித்து அசத்திய இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






