சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து ஆந்திராவுக்கு சிறப்பு ரெயில்கள்


சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து ஆந்திராவுக்கு சிறப்பு ரெயில்கள்
x
தினத்தந்தி 18 Nov 2025 5:08 PM IST (Updated: 18 Nov 2025 5:11 PM IST)
t-max-icont-min-icon

சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆந்திராவிலுள்ள சத்ய சாய் பி நிலையத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆந்திர மாநிலம் புட்டபர்தி அருகே உள்ள சத்ய சாய் பி நிலையத்திற்கு சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06065) மறுநாள் காலை 9.10 மணிக்கு சத்ய சாய் பி நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், சத்ய சாய் பி நிலையத்தில் இருந்து 24-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06066) மறுநாள் பகல் 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

இதேபோல், திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து வரும் 23-ந் தேதி மாலை 6.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06067) மறுநாள் மதியம் 1.30 மணிக்கு சத்ய சாய் பி நிலையத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சத்ய சாய் பி நிலையத்தில் இருந்து 25-ந் தேதி இரவு புறப்படும் சிறப்பு ரெயில் (06068) மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story