இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Dec 2025 1:29 PM IST
காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும். செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுகிறது. போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால் விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். செவிலியர் பணியில் காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்” என்று அவர் கூறினார்.
- 19 Dec 2025 1:28 PM IST
100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம்தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
வரும் 24-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 19 Dec 2025 12:53 PM IST
தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது
எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல், பகல் 2 மணிக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 19 Dec 2025 12:20 PM IST
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்
டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார் நடிகர் சசிகுமார்.
- 19 Dec 2025 12:18 PM IST
கழகத்தின் தொடர் வெற்றிகளை பேராசிரியர் க.அன்பழகனுக்கு அஞ்சலியாக உரித்தாக்குகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 19 Dec 2025 12:17 PM IST
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு நாளை முதல் தடை
சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- 19 Dec 2025 12:16 PM IST
#T20WorldCup டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
- 19 Dec 2025 12:14 PM IST
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 19 Dec 2025 12:13 PM IST
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க அரசு முன்வர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
- 19 Dec 2025 11:46 AM IST
கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு - அன்புமணி கண்டனம்
தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
















