ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்துள்ளது. ஒரே கல்லில் ஆன மரகத நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் தனிச்சிறப்பு பெற்றது. ஏராளமான மக்கல் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மூலவர் பச்சை மரகத நடராஜர் சிலை என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பால் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இங்கு குடி கொண்டிருக்கும் மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும். அந்த ஒரு நாள் தான் அந்த சன்னதி விழாகோலம் பூண்டிருக்கும்.
இந்நிலையில், வரும் 2026 ஜனவரி 2-ம் தேதி திருஉத்திரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் (2-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.






