இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Nov 2025 6:56 PM IST
கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் - கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.
- 20 Nov 2025 6:54 PM IST
சிஎஸ்கே ஜெர்சியை அணிந்தபோது... - சாம்சன் நெகிழ்ச்சி
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
- 20 Nov 2025 6:52 PM IST
ஜனாதிபதி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகள் எங்களுக்கே சாதகம்: திமுக வழக்கறிஞர் வில்சன்
கவர்னர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கெனவே அளித்த தீர்ப்பை தற்போதைய கருத்து பாதிக்காது என வில்சன் தெரிவித்துள்ளார்.
- 20 Nov 2025 6:51 PM IST
முதல்-அமைச்சருடன் உரையாடி, புகைப்படம் எடுத்துக்கொண்ட திமுக மூத்த உறுப்பினர்
விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக நேரில் அழைத்து அவருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.
- 20 Nov 2025 6:34 PM IST
வரலாறு காணாத உச்சத்தில் முட்டை கொள்முதல் விலை..! - உயர்வுக்கு காரணம் என்ன.?
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 605 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டம், அதன் தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், முட்டை கொள்முதல் விலை 610 காசுகளாக அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4-வது முறையாக வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது.
- 20 Nov 2025 5:23 PM IST
பாஜகவை ஆதரிப்பதால் மட்டும் எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரிக்கவில்லை - ஜெயக்குமார்
வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைபாடு என ஜெயக்குமார் கூறினார்.
- 20 Nov 2025 5:21 PM IST
தமிழகத்தில் 10,000 உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
- 20 Nov 2025 5:20 PM IST
2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேசம் அபார பந்துவீச்சு.. அயர்லாந்து திணறல்
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- 20 Nov 2025 5:19 PM IST
“டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர்
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- 20 Nov 2025 5:18 PM IST
8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


















