இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Nov 2025 5:17 PM IST
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: முன்னாள் தேவசம் போர்டு தலைவர் கைது
சபரிமலையில் தங்கத்தகடுகள் திருட்டு வழக்கில் சபரிமலை முன்னாள் தேவசம் போர்டு தலைவர் கைதுசெய்யப்பட்டார்.
- 20 Nov 2025 4:59 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய முன்னணி வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்..?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பங்கேற்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 20 Nov 2025 4:24 PM IST
சட்டவிரோத குவாரி: குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
சட்ட விரோதமாக குவாரி நடத்தி அபராதம் விதிக்கப்பட்டவர்கள் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- 20 Nov 2025 4:24 PM IST
மாணவி படுகொலை: பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் - சீமான்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடராமல் தடுக்க முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
- 20 Nov 2025 4:23 PM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - மேலும் 4 பேர் கைது
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
- 20 Nov 2025 4:22 PM IST
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
மருந்துகள் விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்ற கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
- 20 Nov 2025 4:20 PM IST
எஸ்.ஐ.ஆர் பணிகள் முழுமையாக நிறைவடைய பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - சரத்குமார்
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பப்பெறும் பணி தொய்வாக நடைபெறுவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
- 20 Nov 2025 4:19 PM IST
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை - பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு
அரசியலில் விமர்சனங்கள் செய்வதற்கு சில தகுதிகள் வேண்டும் என்று பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு தெரிவித்துள்ளார்.
- 20 Nov 2025 4:18 PM IST
முப்படைகள் குறித்து படம் எடுக்க ஆசை - கமல்
நாட்டிற்காக ‘அமரன்’ படத்தை எடுத்தோம், முப்படைகள் குறித்து படம் எடுக்க ஆசை என்று கமல் தெரிவித்திருக்கிறார்.
- 20 Nov 2025 3:35 PM IST
கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ் குறித்த கேள்வி.. ஒற்றை வார்த்தையில் பதிலளித்த கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தற்போது முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். காயத்திலிருந்து வேகமாக குணமடைந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கம்மின்சிடம் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்டோக்ஸ் குறித்து ஒரே வார்த்தையில் விவரிக்கவும் என கேட்கப்பட்டது.


















