இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Nov 2025 2:54 PM IST
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- 20 Nov 2025 2:48 PM IST
ஓ.டி.டி ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெளியாகும் படங்கள்
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன.
- 20 Nov 2025 12:49 PM IST
விஜய் மீண்டும் பிரசாரம்
சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 4-ம் தேதி பிரசாரத்திற்கு அனுமதி கோரி சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
- 20 Nov 2025 10:30 AM IST
நெல் ஈரப்பதம் தொடர்பான கோரிக்கை நிராகரிப்பு: மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
- 20 Nov 2025 9:35 AM IST
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டம்?
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 20 Nov 2025 9:32 AM IST
லட்சத்தீவுக்கு நகர்ந்தது காற்றழுத்த தாழ்வு
தமிழகத்தை ஒட்டி குமரிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களிலும்,காரைக்காலிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

















