இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Jun 2025 2:03 PM IST
ஈரான் - இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் ஜூன் 22, 2025 அன்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்கா இந்திய வான்வெளியை பயன்படுத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு பிஐபி மறுப்பு தெரிவித்தது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
- 23 Jun 2025 1:54 PM IST
ஈரானில் ராணுவ விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானில் 6 ராணுவ விமான நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
- 23 Jun 2025 1:50 PM IST
குஜராத் இடைத்தேர்தல்: ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு
4 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. குஜராத்தில் 2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மற்றொன்றில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. விசாவதார் தொகுதியில் ஆம் ஆத்மியும் காடி தொகுதியில் ஆளும் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன. கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் காங்கிரஸ், பஞ்சாப்பின் லுதியானாவில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.
- 23 Jun 2025 1:19 PM IST
சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளராக இருந்த எம்எல்ஏ சதாசிவம் நீக்கம்
சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ. சதாசிவத்தை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக வெடிக்காரனூர் வி.இ.ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- 23 Jun 2025 1:15 PM IST
போதைப்பொருள் விவகாரம் - நடிகர் ஸ்ரீகாந்த்திடம் விசாரணை
முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கிய குற்றசாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்த்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீகாந்த்திற்கு சம்மன் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர், பிரதீப் குமார் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 23 Jun 2025 12:34 PM IST
மியான்மரில் நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் அதிகாலை 5.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
- 23 Jun 2025 12:33 PM IST
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை
குஜராத்தில் 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் ஆம்ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. விசாவதார் தொகுதியில் ஆம் ஆத்மியும், காடி தொகுதியில் ஆளும் பாஜகவும் முன்னிலை வகிக்கின்றன.
கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் காங்கிரஸ், பஞ்சாப்பின் லுதியானாவில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. மேற்குவங்க மாநிலம் காலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
- 23 Jun 2025 11:47 AM IST
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பகுதிக்கு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், காரில் சென்றுள்ளார். அவருடன் காரில், அவருடைய உதவியாளர் பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் சென்றுள்ளனர்.
அப்போது, பூச்சிக்கடை அருகே சென்றபோது, அந்த கார் திடீரென விபத்தில் சிக்கியது. எனினும், இந்த விபத்தில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் உள்பட 5 பேரும் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர்.
- 23 Jun 2025 11:07 AM IST
தென்காசியில் முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மற்றும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- 23 Jun 2025 10:37 AM IST
இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது - ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி
அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது. தவறுக்கான தண்டனை தொடரும் என ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி கூறியுள்ளார். அமெரிக்கா 3 அணுசக்தி நிலையங்களை தாக்கிய பின் முதல் முறையாக கருத்து கூறியுள்ள ஈரானின் உச்சபட்ச தலைவர். எந்த இடத்திலும் அமெரிக்காவைப் பற்றியோ, அதன் தாக்குதலை பற்றியோ தெரிவிக்கவில்லை.















