இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 May 2025 7:32 PM IST
ஐ.பி.எல்.: டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
- 25 May 2025 7:31 PM IST
அபார பந்துவீச்சு.. 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
- 25 May 2025 6:50 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து புறப்பட்டது இந்தியா 'ஏ' அணி
இந்திய ‘ஏ’ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகளிலும், இந்திய அணிக்கெதிராக ஒரு போட்டியிலும் விளையாட உள்ளது. இந்த தொடர் மே 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய ‘ஏ’ அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா ஏ அணி இங்கிலாந்து புறப்பட்டது.
- 25 May 2025 6:04 PM IST
வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி 7வது மலையில் பெண் பக்தர் ஒருவரும் 5வது மலையில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 May 2025 5:37 PM IST
கனமழை: வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தற்காலிக தடை
கோவையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 25 May 2025 5:35 PM IST
கட்சியில் இருந்து மகன் தேஜ் பிரதாபை நீக்கிய லாலு பிரசாத்
தேஜ் பிரதாபை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்குவதாக லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்
- 25 May 2025 5:33 PM IST
கோவையில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி குறித்து வீடியோ வெளியிட்ட இளையராஜா
என்னதான் அடாது மழை பெய்தாலும், விடாது எங்களது இசை நிகழ்ச்சி நடக்கும் என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
- 25 May 2025 5:31 PM IST
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 25 May 2025 5:22 PM IST
பிராவிஸ் அதிரடி.. குஜராத் அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்கு
சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ரஷித் கான், ஷாருக் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.
- 25 May 2025 4:32 PM IST
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதை உற்று நோக்கினாலே பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.