இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Sept 2025 11:00 AM IST
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நாட்டுப் படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 27 Sept 2025 10:58 AM IST
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிக்க்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் இன்று கரையை கடக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 27 Sept 2025 10:45 AM IST
நெல்லுக்கு குறைந்த கொள்முதல் விலை வழங்கும் திமுக அரசு: அன்புமணி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் உழவர்களின் முதல் எதிரி திமுக அரசு என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்டுள்ளார்.
- 27 Sept 2025 10:43 AM IST
குரூப்-4 தேர்வர்களுக்கு நற்செய்தி: கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- 27 Sept 2025 10:42 AM IST
உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தாறுமாறாக உயர்ந்த வெள்ளி விலை
விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
- 27 Sept 2025 10:40 AM IST
5.5 லட்சம் பேர் எழுதும் குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு - நாளை நடக்கிறது
முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1905 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது.
- 27 Sept 2025 10:39 AM IST
121-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது உருவச் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலை அருகே அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
- 27 Sept 2025 10:37 AM IST
குடும்பத்தில் அமைதி நிலவும்...இன்றைய ராசிபலன் - 27.09.௨௦௨௫
ரிஷபம்
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியர்களின் ஆசி கிட்டும். அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். நண்பர்கள் கைக் கொடுப்பர். உடல் நலம் தேறும். அரசியலில் நாட்டம் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை














