இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Oct 2025 9:58 AM IST
முதல் டி20 போட்டி: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது.
- 28 Oct 2025 9:55 AM IST
தொடர் சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 28 Oct 2025 9:39 AM IST
சென்னையில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வாளர் தகவல்
வங்கக்கடலில் உருவாகி உள்ள மோந்தா புயல், தீவிர புயலாகவே இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் மொந்தா புயல் காரணமாக பெய்து வரும் தொடர்மழை தென்சென்னையில் முதலில் குறையும் என்றும், வடசென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் இன்று பிற்பகலுக்குப்பின் மழைக்கான வாய்ப்பு மிகக்குறைவு என்றும் ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் மாலை வரை மழை இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
- 28 Oct 2025 9:31 AM IST
தீவிர புயலாக வலுப்பெற்றது “மோந்தா புயல்” - எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
மோந்தா புயல் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 28 Oct 2025 9:30 AM IST
புயல் எதிரொலி... தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- 28 Oct 2025 9:28 AM IST
கடகம்
வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள் மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டி வருவீர்கள். பெண்கள் புதிய தங்க நகை மற்றும் புது ரக ஆடைகளை வாங்கி இன்புறுவர். உடல் நலம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்












