முதல் டி20 போட்டி: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்


முதல் டி20 போட்டி: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
x

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது.

ராவல்பிண்டி,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகிறது. அதன்படி பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி ராவல்பிண்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோத உள்ளதால் இந்த ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story