இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 29 Sept 2025 12:56 PM IST
ரூ.41 கோடி பட்ஜெட்...ரூ.210 கோடி வசூல்...55 விருதுகளை வென்ற உண்மை கதை...எதில் பார்க்கலாம்?
ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம்.
- 29 Sept 2025 12:05 PM IST
'ஓஜி' படத்தில் பவன் கல்யாணின் மகளாக நடித்த சிறுமி யார் தெரியுமா?
இந்தப் படத்தில் பவன் மற்றும் பிரியங்காவின் மகளாக சாயிஷா நடித்தார்.
- 29 Sept 2025 11:38 AM IST
கரூர் செல்லும் ஆதவ் அர்ஜுனா
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை, தவெக தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்திக்க முடிவு
கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட உடனே கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்
- 29 Sept 2025 11:33 AM IST
'கே-ராம்ப்' என்பது ஆபாச வார்த்தை இல்லை'' - இயக்குனர் விளக்கம்
படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து, இது ஒரு ஆபாச படம் என்று டிரோல் செய்யப்பட்டு வந்தது.
- 29 Sept 2025 11:01 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.
- 29 Sept 2025 10:44 AM IST
ரஜினிகாந்தை பற்றி நடிகை ரித்திகா சிங் சொன்ன விஷயம் - வைரல்
''இறுதிச்சுற்று'' படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ரித்திகா சிங். மாதவன் நடிப்பில் வெளியான அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.
- 29 Sept 2025 10:10 AM IST
''ஹீரோயினாகாமல் இருந்திருந்தால், அதுவாகத்தான் ஆகியிருப்பேன்'' - ''லிட்டில் ஹார்ட்ஸ்'' பட நடிகை
''லிட்டில் ஹார்ட்ஸ்'' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ஷிவானி நகரம்.
- 29 Sept 2025 9:39 AM IST
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.














