இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 29 Oct 2025 10:00 AM IST
2026 உலகக் கோப்பை போட்டியில் ஆட விரும்புகிறேன்: மெஸ்சி
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி விளையாடுவாரா? அல்லது உடல்தகுதியை காரணம் காட்டி ஒதுங்கி விடுவாரா? என தொடர்ச்சியாக எழுந்த கேள்விகளுக்கு அவரே தற்போது விடை அளித்துள்ளார்.
- 29 Oct 2025 9:58 AM IST
உடல்நிலையில் முன்னேற்றம்...சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
- 29 Oct 2025 9:56 AM IST
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இன்று மோதல்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
- 29 Oct 2025 9:51 AM IST
முதல் டி20: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
- 29 Oct 2025 9:50 AM IST
இந்திய கடல்சார் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு: தமிழக அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்
மும்பையில் நடக்கும் இந்திய கடல்சார் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று உரையாற்றுகிறார்.
- 29 Oct 2025 9:49 AM IST
தென்காசியில் ரூ.1,020 கோடியில் நலத்திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இன்று (புதன்கிழமை) நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
- 29 Oct 2025 9:47 AM IST
ராசிபலன் (29.10.2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணம் பாக்கெட்டை நிரப்பும்..!
மேஷம்
நடை பாதை வியாபாரிகள் மழையினால் பாதிப்பர். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை













