இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Aug 2025 10:01 AM IST
மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. தேசிய அவசர நிலையை அறிவிக்கவோ, அல்லது உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் வரிகளை விதிக்கவோ டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
- 30 Aug 2025 9:54 AM IST
சிவகார்த்திகேயனின் "மதராஸி" படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்
'மதராஸி' படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழுவின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் மதராஸி திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
- 30 Aug 2025 9:50 AM IST
‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ ஏஐ துறையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி நிறுவனம்
அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கிடைப்பதற்காக 'ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்' என்ற நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.
- 30 Aug 2025 9:47 AM IST
வரலாறு காணாத புதிய உச்சம்.. ரூ.77 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை
தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 620-க்கும், ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,720 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியின் விலையும் வரலாறு காணாத அளவில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.134-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 30 Aug 2025 9:35 AM IST
பிரதமர் மோடிக்கு போதி தர்மர் பொம்மை பரிசளிப்பு
தமிழகத்தின் காஞ்சீபுரத்தில் இருந்து ஜப்பான் சென்ற துறவியான போதி தர்மரின் மரபை அடிப்படையாக கொண்ட தருமா பாரம்பரியம் ஜப்பானில் புகழ்பெற்று விளங்குகிறது. ஜப்பானில் போதி தர்மர், தருமா டைஷி என அழைக்கப்படும் நிலையில், அவரது மாதிரியாக வடிவமைக்கப்படும் தருமா பொம்மைகள் மங்களகரமான மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும் புனித பொருளாக அங்கு பார்க்கப்படுகிறது.
- 30 Aug 2025 9:13 AM IST
ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்..? அதிர்ச்சி ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட அரசு
புஜி எரிமலை வெடித்து சிதறுவது போன்ற ஏ.ஐ. வீடியோ ஒன்றை அந்தநாட்டின் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்தவீடியோவில் புஜி எரிமலை வெடிப்பால் ஏற்படும் பயங்கரங்கள், மக்கள்படும் அவதிகள், நோய் பரவல்கள் மற்றும் எரிமலையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய தகவல்கள் உள்ளன. இந்த வீடியோ ஜப்பான் மட்டுமின்றி உலகநாடுகளிடையே வைரலாகி வருகிறது.
- 30 Aug 2025 9:10 AM IST
சீனாவில் 1-ந்தேதி பிரதமர் மோடி-புதின் சந்திப்பு - கிரெம்ளின் மாளிகை உறுதி
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 1-ந் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
இந்த தகவலை கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷாகோவ் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது. '1-ந்தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சந்திப்புக்குப்பின் உடனடியாக எங்கள் அதிபர் (புதின்) மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடக்கிறது' என்று கூறினார்.
- 30 Aug 2025 9:09 AM IST
தமிழ்நாட்டிற்கு பெரு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறேன் - மு.க.ஸ்டாலின் பேட்டி
தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இங்கிலாந்து, ஜெர்மனி செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனி புறப்பட்டுள்ளார். அவரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் வழியனுப்பி வாழ்த்து தெரிவித்தனர். இன்று இரவு 9 மணி அளவில் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி சென்றடைகிறார்.
- 30 Aug 2025 9:07 AM IST
சிம்மம்
கணவன் மனைவி ஒற்றுமை காப்பர். தேகம் பலம்பெறும். பணவரவு சற்று தாமதப்பட்டாலும் சம்பளம் வந்து சேரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும். பெண்கள் செலவினை சமாளிப்பர்.















