இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 31 Aug 2025 9:43 AM IST
ஆபரேஷன் சிந்தூர்: “50-க்கும் குறைவான ஆயுத” தாக்குதலிலேயே பாகிஸ்தான் மண்டியிட்டது - இந்திய விமானப்படை
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா மே மாதம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய காட்சிகள் மற்றும் விவரங்களை இந்திய விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி நேற்று பகிர்ந்து கொண்டார்.
- 31 Aug 2025 9:41 AM IST
சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி - அமெரிக்காவுக்கு எதிராக வியூகம் வகுக்கப்படுமா?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும்.
இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தது. இந்த அமைப்பின் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகளில் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு சீனா அழைப்பு விடுத்து இருந்தது. இதற்காக இந்தியா வந்த சீன வெளியுறவு மந்திரி வாங் யி, பிரதமரை சந்தித்து நேரில் அழைப்பு விடுத்தார். பிரதமரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
- 31 Aug 2025 9:37 AM IST
வேளாங்கண்ணி திருவிழா: விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப்பெருவிழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள். இதனால் பொதுமக்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.
- 31 Aug 2025 9:36 AM IST
கொட்டித் தீர்த்த கனமழை: சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோலாம்பூர், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல இருந்த 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அதைபோல வெளிநாடு மற்றும் வெளியூரிகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 12 விமானங்கள் தாமதமாக வந்தடைந்தன.
- 31 Aug 2025 9:34 AM IST
“இந்தாண்டில் முதல்முறையாக சென்னையில் மேகவெடிப்பா..?” - வெளியான முக்கிய தகவல்
சென்னையில் இந்தாண்டில் முதல்முறையாக மேகவெடிப்பு ஏற்பட்டதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், "இந்த ஆண்டு சென்னைக்கு முதல் மேக வெடிப்பு. சென்னையின் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது" என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
- 31 Aug 2025 9:33 AM IST
ரகுல் பிரீத் சிங் கழுத்தில் இருக்கும் வித்தியாசமான பேட்ச் ...என்னன்னு தெரியுமா?
ரகுல் பிரீத் சிங் கழுத்தில் ஒரு வித்தியாசமான பேட்சுடன் காணப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வாருகிறது. சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் ரகுல் பிரீத் சிங் காணப்பட்டார். அப்போது ரகுலின் கழுத்தில் பேட்ச் ஒன்று இருப்பது கேமராவில் பதிவானது.
- 31 Aug 2025 9:33 AM IST
வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம்; தாசில்தார் இடமாற்றம், 7 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள், திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தால் முறையாகக் கையாளப்படாமல், வைகை ஆற்றில் வீசப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
- 31 Aug 2025 9:31 AM IST
பூந்தமல்லி-போரூர் இடையே டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டம்
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 4-வது வழித்தடமான (ஆரஞ்சு வழித்தடம்) கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைகிறது.
- 31 Aug 2025 9:28 AM IST
விநாயகர் ஊர்வலம்.. சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.
- 31 Aug 2025 9:25 AM IST
ஜெர்மனி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
ஜெர்மனி சென்றடைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
















