கோடை விடுமுறை; கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கோடை விடுமுறை; கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கன்னியாகுமரி

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்புக்கு இன்னும் 2 வாரமே உள்ள நிலையில் பலரும் குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.

உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரியில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அதேவேளை அலுவலகங்களுக்கு இன்று வாரவிடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரிய உதயம் காண குவிந்தனர். அங்கு சூரியன் உதய காட்சியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பலரும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வருகின்றனர். கடலில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

1 More update

Next Story