காஞ்சிபுரத்தில் சோகம்: திருமண நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் உயிரிழந்த பெண்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பாட்டிற்கு சில பெண்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல மெடிக்கல் கடை உரிமையாளர் ஞானம். இவரது மனைவி ஜீவா நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மராப்டைப்பு ஏற்பட்டதால் நடனமாடிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜீவாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் கண் முழிக்காததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜீவாவை பரிசோததித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்கள் பதிவு செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மகிழ்ச்சியாக நடனமாடும் ஜீவா திடீரென தலை சுற்றுவதை போல் தலையில் கை வைத்து விட்டு, அப்படியே மேடையில் மயங்கி விழுந்தார். நடனமாடிக்கொண்டு இருக்கும் போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






